வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை கிடு கிடு உயர்வு

2பார்த்தது
வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை கிடு கிடு உயர்வு
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 3000 முதல் ரூ. 4000 வரையிலும், முல்லைப்பூ ரூ. 1200, ஜாதிப்பூ ரூ. 1000, அரளிப்பூ ரூ. 200 என விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி