திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கருங்கல் ஊராட்சி செட்டியூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவரது மனைவி காளியம்மாளுக்கு (65) கிடைக்க வேண்டிய மகளிர் உரிமைத்தொகை அதிகாரிகளின் குளறுபடியால் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கடந்த ஆறு மாதங்களாக பெரியசாமி வங்கிக் கணக்கில் ஏறிக் கொண்டு உள்ளது.
இதுகுறித்து பெரியசாமியின் மகன் நீலமேகம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய சூழ்நிலையில் இறந்து போன ஆணின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கும் சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.