திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொருளூர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அம்பிளிக்கை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (எ)ராஜமாணிக்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் கோபால்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி(55) என்பவருக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.