ஒட்டன்சத்திரம்: ரூ. 3.71 கோடி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

995பார்த்தது
ஒட்டன்சத்திரம்: ரூ. 3.71 கோடி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நேற்று (11.02.2026) ரூ. 3.71 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 72 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ஒருங்கிணைந்த மலக்கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.