நத்தம்: கைலாசநாதர் கோயில் தேரோட்டம்

769பார்த்தது
நத்தம் அருகே கோவில்பட்டியில் உள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று (மே 30) நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாதர் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.