திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அத்தப்பன்பட்டியில், ஆராயம்மாள்(70) உயிரிழந்த நிலையில், வழக்கமாக புதைக்கும் மயானத்தை ஒருவர் தனக்கு சொந்தமான நிலம் என கூறி கம்பி வேலி அமைத்ததால், உடல் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் தாசில்தார் சஞ்சய்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபுபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டு, ஆராயம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.