ஒட்டன்சத்திரம்: கட்டுப்பாட்டை இழந்த கார்.. பெண் பலி

2341பார்த்தது
ஒட்டன்சத்திரம்: கட்டுப்பாட்டை இழந்த கார்.. பெண் பலி
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மணிமுத்து (35) தனது குடும்பத்துடன் பெங்களூரு நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மினி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் மணிமுத்து, அவரது மனைவி அருந்ததி (30), மகள்கள் ஷன்மதி (3), வியான் (2) மற்றும் செல்லமுத்து (65) உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். தருமபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருந்ததி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி