திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் செம்மடைப்பட்டியை சேர்ந்த சிவரத்தினம் என்பவரின் கார் சென்டரில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.