திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த ஆய்வுக்கூட்டம் நலவாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.