தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை

160பார்த்தது
தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை
அய்யலூர், கடவூர், புத்தூர், வடமதுரை, தென்னம்பட்டி, மலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளியின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் 15 கிலோ பெட்டி 750 முதல் 1200 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது 150 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைந்துள்ளது. வெளிமாநில தக்காளி வரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி