கொடைக்கானலில் அலறிய சுற்றுலாப் பயணிகள்!

6பார்த்தது
கொடைக்கானல் நகர் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு மாடுகள் திடீரென நகரின் முக்கிய சாலைகளில் உலா வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரம்மாண்ட கொம்புகளைக் கொண்ட இந்த காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக நடமாடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு மாடுகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :