இடையகோட்டையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

1101பார்த்தது
இடையகோட்டையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்த சக்திவேல் (44), மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இடையக்கோட்டை காவல்துறையினர், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.