திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சாந்தரூபன் (28) என்பவர், வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். இந்த விஷயம் பெண்ணின் தாய்மாமன் சுபாஷுக்குத் தெரியவர, அவர் சாந்தரூபனை கெங்குவார்பட்டிக்கு வரவழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்து, அவரது மோட்டார் சைக்கிளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். இது குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.