உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சாலை மேம்பாடு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மரிச்சிலம்பு ஊராட்சியில் ரூ. 72.10 லட்சம் மதிப்பீட்டில் கொத்தயம் பூலாம்பட்டி சாலை முதல் அமரபூண்டி இணைப்புச்சாலை வரையிலும், ரூ. 42.15 லட்சம் மதிப்பீட்டில் மரிச்சிலம்பு - மார்க்கண்டாபுரம் சாலை வரையிலும், ரூ. 27.65 லட்சம் மதிப்பீட்டில் புளியம்பட்டி சாலக்கடை சாலை முதல் மார்க்கண்டாபுரம் வேலுச்சாமி தோட்டம் வரையிலும் தார்ச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், மார்க்கண்டாபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும்.