திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே அழகாபுரி கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அருள்மிகு பட்டவன் சுவாமி அம்மன் திருவிழாவில், பூசாரிகள் தங்கள் மடியில் தேங்காய்களை கட்டிக் கொண்டு வந்து, பக்தர்களின் தலையில் உடைக்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. உறுமி மேளங்கள் முழங்க, கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பட்டவன் அரியச்சயப்பன், தொட்டிச்சிஅம்மன், நாகம்மாள், காமக்காள், ஏழு கிழவர்கள், சாட்சியம்மன், கொங்கணி கருப்பசாமி, ஆயிரம் மாடோட்டி ஆகிய தெய்வங்கள் இந்த விழாவில் வழிபடப்பட்டன.