
பழனியில் வாகன சோதனையை தொடங்கிய காவல்துறையினர்
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்று (மார்ச் 15) மாலை அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் அமலுக்கு வர உள்ளன. இதையொட்டி, பழனியில் காவல்துறையினர் துணை ராணுவப் படையினருடன் இணைந்து வாகன சோதனையைத் தொடங்கியுள்ளனர்.






































