திண்டுக்கல்: மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; 10 பேர் காயம்

71பார்த்தது
திண்டுக்கல்: மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; 10 பேர் காயம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 14 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் இரவு அவர்கள் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். பழனி அருகே கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் சவரிக்காடு பகுதியில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைப்பாதையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த 10 பேர் லேசான காயமடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். பின்னர் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வேன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது, போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்தி