பழனி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரையைச் சேர்ந்த கோபிநாத், முகமது ரபி மற்றும் பழனியைச் சேர்ந்த விகாஸ் ஆகிய மூன்று வாலிபர்களை காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.