திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கடந்த 19-11-25 மற்றும் 20-11-25 ஆகிய இரண்டு நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரொக்கமாக 4 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரத்து 257 ரூபாய், 872 கிராம் தங்கம், 33153 கிராம் வெள்ளி, மற்றும் 1089 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் வருவாயாக கிடைத்துள்ளன. தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்பினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.