திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், கொடைக்கானல் பகுதியில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய நான்கு முக்கிய சுற்றுலா தலங்களுக்கு மே 31 ஆம் தேதி வரை கட்டணம் இல்லை என அறிவித்துள்ளது. கோடை விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில்,
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.