கொடைக்கானல்: சிறுவனின் பையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

1557பார்த்தது
கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள உணவகத்தில் 15 வயது சிறுவன் தனது உறவினர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது பையை திருடிச் சென்றனர். அந்தப் பையில் பணம் மற்றும் செல்போன் இருந்தன. திருடர்களைக் கண்டறிந்த சிறுவனும் உறவினர்களும் அவர்களை மன்னவனூர் கைகாட்டிப் பகுதியில் விரட்டிச் சென்றனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி