பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தங்களது குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அதன்படி பழனி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோயிலில் உள்ள தரிசன வழிகள் நிரம்பி வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.