திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரபட்டி ஆர்.ஜி. நகரைச் சேர்ந்த நிரேஷ் (27) என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் பழனிக்குச் சென்றபோது, நெய்க்காரபட்டி ஆர்.ஆர். மில் அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.