பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் சின்னக்கலையம்புத் தூரில் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இங்கு பழனி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவிகள் சேர்க்கைக்கு ஏராளமான மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.
இதில், பேராசிரியர் குழுவினர் மாணவிகளின் கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்து சேர்க்கை நடத்தினர். பின்னர் கல்லூரிச் செயலர் வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணை வழங்கினர். இதேபோல் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியிலும் இளநிலை மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் கலந்துகொண்டு சேர்க்கை ஆணை வழங்கினார்.