பாப்பம்பட்டியைச் சேர்ந்த முருகவேல், தனது முன்னோர்கள் பாதுகாத்து வந்த பழமையான வாளை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த இரும்பாலான போர்வாள் சுமார் 1.110 கிலோ எடையுள்ளது என்றும், இது 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அருங்காட்சியக காப்பாட்சியர் சசிகலா மற்றும் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தனர். மேலும் இது குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.