பழனி அருகே ரயில் தண்டவாளத்தில் சடலம் மீட்பு

1325பார்த்தது
பழனி அருகே ரயில் தண்டவாளத்தில் சடலம் மீட்பு
பழனி அருகே பாலப்பன்பட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடிபட்டு சடலமாக கிடந்தார். வெள்ளை சட்டை, பச்சை வேட்டி அணிந்திருந்த அந்த நபர் கோவை-மதுரை ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பழனி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி