பழனி அருகே பிரிட்ஜ் வெடித்து வீடு தீக்கிரை

1372பார்த்தது
பழனி அருகே சின்னகலைமுத்தூர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளிகைப் பொருட்கள், துணிமணிகள், பீரோ, முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் கருகி, குடும்பத்தின் வாழ்வாதாரமே சாம்பலானது. அக்கம் பக்கத்தினர் இரண்டு காஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. வருவாய்த்துறையினர் அரிசி, பருப்பு, துணிமணிகள் வழங்கினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசு நிவாரணம் கோரி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி