திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தாளையம் பைபாஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.