பழனி: தூக்கி வீசப்பட்ட கார்கள்..பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புறவழிச்சாலையில் மாட்டுப்பாதை என்ற இடத்தில் தாமரைக் குளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நோக்கிச் சென்று மாட்டுப்பாதை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்து முன்னால் சென்ற கார் மீது மோதியதில் இரண்டு கார்களும் தூக்கி வீசப்பட்டன. 

இதில் இரண்டு கார்களும் மூன்று முறைக்கும் மேல் சுற்றி சாலையில் விழும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் ராஜேஷ் குடும்பத்தினர் 5 பேர் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Job Suitcase

Jobs near you