பழனி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

61பார்த்தது
பழனி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் குழந்தைகளை ஊக்கப்படுத்தி நகரமன்ற உறுப்பினர் காளீஸ்வரி பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.