பழனி கோவில் சார்பில் சண்முகநதி பகுதியில் தூய்மை பணி

1பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் சண்முகநதிப் பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆற்றங்கரையில் கிடந்த குப்பைகள் மற்றும் பழைய துணிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், நீரோட்டப் பாதையில் ஆக்கிரமித்திருந்த ஆகாயத் தாமரைச் செடிகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன. கோவில் நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.