பழனி வ. உ. சி. மத்திய பேருந்து நிலைய நுழைவாயிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற வன்னியரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.