திண்டுக்கல் மாவட்டம் பழனி தபால் நிலையம் முன்பு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சரை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.