கொடைக்கானல்-அடுக்கம் மலைச் சாலையில் நேற்று இரவு யூக்காலி மரம் முறிந்து விழுந்ததால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் மரத்தை அகற்றிச் சாலையைச் சீரமைத்த பிறகு
போக்குவரத்து சீரானது.