இயக்குனர் வினோத் பழனி முருகன் கோவிலில்சாமி தரிசனம் செய்தார்.

1பார்த்தது
‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வினோத், நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யுடன் நவம்பர் 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘ஜனநாயகம்’ படத்திற்காக பழனி மலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார். அவர் படிப்பாதை வழியாக மலை ஏறி, சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனை தரிசித்தார். அவரை காண வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், ரோப் கார் வழியாக அடிவாரம் திரும்பினார். அவருடன் நண்பர் நந்தன் மற்றும் சகோதரர் இயக்குநர் ரா. சரவணன் ஆகியோரும் வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி