திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியத்தில் உள்ள கோம்பைப்பட்டி கிராமத்தை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைத்ததை எதிர்த்து, தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோம்பைப்பட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.