தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தா தனது புதிய படமான 'சுயம்பு' வெற்றி பெற வேண்டி, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மனைவி மற்றும் மகனுடன் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த அவருக்கு பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.