பழனி - கொடைக்கானல் சாலையில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு எதிரே உள்ள வயல்வெளியில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள், மீட்புப் பணியின் மூலம் தீயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.