பெரியகலையமுத்தூரில் பூக்குண்டம் இறக்கம்

2பார்த்தது
பழனி அருகே பெரியகலையமுத்தூர் அருள்மிகு ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்களுக்குப் பிறகு, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி