பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நந்தவனத்தை தொழிலதிபர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். அவரது தலைமையில் தன்னார்வலர்கள் இணைந்து கோவில் வளாகத்தில் இலவசமாக மரக்கன்றுகளை நட்டு பசுமைப் பணிகளில் ஈடுபட்டனர். கோவில் சுற்றுச்சூழலை மேலும் பசுமையாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.