தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்

579பார்த்தது
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளாவில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 31) மற்றும் நாளை (ஜூன் 1) ஆகிய 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி