தவசிமேடையில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 27 பேர் காயம்

388பார்த்தது
நத்தம் அருகே தவசிமேடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 750 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களில் 269 பேரும் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 9 பேர், பார்வையாளர்கள் 10 பேர், காளை உரிமையாளர்கள் 7 பேர், ஊர் காவல் படை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 27 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி