பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமுருக பக்தசபா சார்பில் மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவில் சின்னக்குமாரசாமியின் தங்கமயில், தங்கத் தேர் புறப்பாடுகளும் இடம்பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.