கொடைக்கானல் அருகே குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகில் உள்ள தனது பங்களாவில் சூரிய நாராயணன் (73) என்பவர் சுற்றுலாப் பயணிகளாக வந்த 5 பேர்களால் தாக்கி கட்டிப் போடப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழந்தார். மேலும், அவரது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவையும் திருடப்பட்டன. இந்த கொலை சம்பவத்தில் சொத்து பத்திரங்கள், நகை, பணத்துக்காக கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி மற்றும் ஹவாலாவில் ஈடுபடுபவர்கள் என கூறப்படும் சென்னை, அரக்கோணம், திருவள்ளூரைச் சேர்ந்த 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.