பழனி முருகன் கோவிலில் வைகாசி கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் பல்வேறு பூஜைகள் மற்றும் முருகனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டன. மாலை விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து தங்கமயில் வாகனம் மற்றும் தங்கரத புறப்பாடு பக்தர்களின் தரிசனத்திற்கு நடந்தது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.