திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பூலாம்பட்டியில், தோட்ட கிணற்றில் மோட்டார் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்கானிக் சேகர், எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பழனி தீயணைப்புப் படையினர் அவரது உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.