திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் வருகை தந்தார். அவருக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சமூக பிரதிநிதிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.