கொடைக்கானலில் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல், தோல் நோய் மற்றும் சுவாசப் பாதிப்பு உள்ள குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக் கூடாது என கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏரிச்சாலை, பூங்கா சாலை போன்ற பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, குதிரை உரிமையாளர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.