பழனியில் வட்டார
போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த 430 பள்ளி வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. வேக கட்டுப்பாட்டு கருவி, பிரேக், முதலுதவி பெட்டி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 49 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டதால், அவற்றை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.