சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 23 வயதுக்கு உட்பட்டோர் மல்யுத்த போட்டியில் பழனியைச் சேர்ந்த வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
வருகின்ற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த வெற்றி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் வீராங்கனைகள் பாராட்டப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.